தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம். அந்த வகையில் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை அவர் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக ஜொலிக்கிறார். இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற அடி ராக்காயி மற்றும் மச்சான பாத்தீங்களா ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மூன்று வருடங்களில் அதாவது கடந்த 1979 ஆம் ஆண்டில் தன்னுடைய 100-வது படத்திற்கு இசையமைத்து முடித்தார்.

அடுத்து 6 வருடங்களில் அவர் 200 வது படத்தை கடந்தார். ஒரு வருடத்தில் 50 படங்களுக்கு மேல் இசை அமைத்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். இந்நிலையில் இசைஞானி இளையராஜா ஒரு பைசா கூட வாங்காமல் இசையமைத்து கொடுத்து ஹிட்டாகிய படங்களும் இருக்கிறது. அதாவது அந்த காலத்தில் அறிமுக இயக்குனர்களாக வந்த பி. வாசு, சங்கிலி முருகன், மணிவண்ணன், போத்தன் ஆகியோர் அவரிடம் சென்று தங்கள் படங்களுக்கு இசையமைக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட இசைஞானி ஒரு பைசா கூட வாங்காமல் அவர்களுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்து ஹிட் ஆக்கினார். மேலும் இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.