
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 என்ற உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் லஷ்மிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா உலக புகழ் பெற்றது. அந்த வகையில் இன்று திருவிழா நடைபெற உள்ளதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் முக்கிய துறைகளை தவிர்த்து பிற அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.