
2023-ன் கிரணங்கள் நிகழ்வு பற்றி மத்தியப்பிரததேசத்தின் உஜ்ஜைனிலுள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் கூறியதாவது, நடப்பு ஆண்டில் 2 சூரிய கிரகணமும், 2 சந்திர கிரகணமும் நிகழ்கிறது. ஏப்ரல் 20ஆம் தேதியன்று நிகழும் முழு சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது என்று அவர் கூறினார்.
இதையடுத்து மே மாதத்தில் 5 மற்றும் 6ம் தேதிகளில் சந்திக்கும் இரவில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதை இந்தியாவில் பார்க்க இயலும். அதன்பின் அக்,.14, 15-ம் தேதிகளில் இடையிலான இரவில் ஒரேயொரு வளைய சூரியகிரகணம் நிகழ்கிறது. ஆனால் இதை இந்தியாவில் காணமுடியாது. அதேமாதம் 28, 29 ஆம் தேதிகளில் நிகழும் பகுதியளவு சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணலாம். இக்கிரகணத்தின் போது சந்திரனின் 12.6% பூமியின் நிழலில் இருக்கும் என அவர் கூறினார்.