பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவையில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். அந்த அறையில் பிப்ரவரி 16ஆம் தேதி மாவேலிக்கரை, செங்கனூர், சங்கனாச்சேரி மற்றும் கோட்டையம் வழியாக செல்வதற்கு பதில் ஆலப்புழா வழியாக இயக்கப்படும் எனவும் பிறகு கோவை, திருப்பூர், ஈரோடு , சேலம் , ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் சென்றடையும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது