
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு மற்றும் திமுக அரசு ஒரே கோட்பாட்டில் இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சுதந்திர இந்தியாவில் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது பல்வேறு அமைப்பினரின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் இதுவரை நடத்தவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதிலும் அதனை நடத்தவில்லை.தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம். அரசியலமைப்பு சட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உரிமைகள் இருக்கிறது.
இதனால்தான் பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி புள்ளி விவரங்களை கையில் வைத்துள்ளது. தற்போது தெலுங்கானா மாநிலம் கூட ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து புள்ளி விவரங்களை கையில் வைத்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிற மாநிலங்களில் பின்பற்றப்படுவதாக பெருமை கொள்ளும் தமிழக அரசு மற்றும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் போது அதை தமிழ்நாட்டில் மட்டும் செய்ய தயங்குவது ஏன். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான உரிமை தமிழக அரசுக்கு இருக்கும்போது சமூகநீதி பேசும் இந்த அரசு அதை செய்யாமல் மக்களை ஏமாற்றுகிறது. இதில் பெரியாரை நாங்கள் பின்பற்றுகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். மேலும் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதில் ஒன்றிய அரசும் தமிழக அரசும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறது என்பதை மட்டும் நான் சுட்டிக்காட்டிக் கொள்ள விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) February 6, 2025