
யூடியூபர் மற்றும் சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜா சுவாதி நாகராஜன் எனும் பத்திரிகையாளரை காதலித்து வந்த நிலையில் இன்று அவரை திருமணம் செய்துக் கொண்டார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அபிஷேக் ராஜாவின் வாழ்க்கை இனிமேல் ஹேப்பியாக இருக்க வேண்டும் என பிக் பாஸில் அவருக்கு கிடைத்த ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தி வருகின்றனர். விரைவில் அவர் இயக்கியுள்ள ஜாம் ஜாம் படமும் வெளியாகும் என தெரிகிறது.