
மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், காலையிலிருந்து வீட்டுக்காவலில் வைத்திருந்து நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் வெளியில் விட்டனர். தமிழகத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தலிபான் அரசுக்கும் இந்து விரோத தீய அரசுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன், இப்படிதான் உத்திரபிரதேசம் மாநிலத்திலும் இருந்தது. இனிமேல் எதிரிகள் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
அதுபோல தமிழகத்திலும் நடக்கும். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தை பங்கு போட நினைக்கும் தீய கூட்டத்திற்கு மற்றொன்றையும் சொல்லிக் கொள்கிறேன். இங்கு முதலில் வந்தது முருகன் கோவிலா அல்லது தர்காவா? எது முன்னதாக வந்தது என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இன்று ஏன் இந்த பிரச்சனை வருகின்றது? திமுக ஆட்சிக்கு வருகின்ற போதெல்லாம் இந்துக்களுக்கு விரோத செயல்கள் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்