
சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதன் பிறகு சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இவை உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கிடையாது. ஆனால் சமூக வலைதளத்தில் வைரலாகிவிட்டது. அண்மையில் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ரச்சிதா கன்னட இயக்குனர் ஒருவரை கரம் பிடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.