
ராஜஸ்தான் மாநிலத்தில் எந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக அனைத்து வீடு மற்றும் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் தோறும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுக்கு குறைவாக மின் கட்டணம் உள்ளவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்கியுள்ளது.
அதன்படி ராஜஸ்தானில் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு நிலையான கட்டணம், எரிபொருள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 100 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கான எந்த கட்டணத்தையும் மக்கள் செலுத்த வேண்டாம். 200 யூனிட் பயன்படுத்தியவர்கள் தற்போதைய தொகையான 1610 ரூபாய்க்கு பதில் 503 ரூபாய் செலுத்தினால் போதும் என அரசு தெரிவித்துள்ளது.