
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள் அதற்காக அபராதம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கில் இருப்பு மைனஸில் இருந்தாலும் அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அபராதம் செலுத்த வலியுறுத்தும் வங்கிகள் மீது bankingombudsman.rbi.orb.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என கூறியுள்ளது.