தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மதம் ரீதியான மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் வசனம், பாடல், புகைப்படங்களை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆறு மாதத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டவர்களின் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.