
இந்தியாவில் கடந்த சில நாட்களாக விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் விலைவாசி உயர்விலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், பருப்பு வகைகளை மலிவான விலையில் வாங்குவதற்காக பாரத் தால்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கடலை பருப்பை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக கடலைப்பருப்பு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதனைத் தவிர NCCF, Kendriya Bhandar மற்றும் மதர் டெய்ரியின் Safal இன்சில்லறை விற்பனை கடைகளிலும் கடலை பருப்பு 60 ரூபாய்க்கு மலிவு விலையில் கிடைக்கும். மேலும் மானிய விலையில் 30 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஒரு கிலோ 55 ரூபாய் என்ற விலையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கையிருப்பு பருப்புகளை சானப்கருப்பாக மாற்றுவதன் மூலமாக நுகர்வோருக்கு மலிவு விலையில் பருப்பு வகைகள் கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாநில அரசின் நலத்திட்டங்களுக்காகவும் காவல்துறை, சிறைச்சாலைகளின் கீழ் வழங்குவதற்காகவும் நுகர்வோர் கூட்டுறவு கடைகள் மூலமாக விநியோகிக்கவும் கடலைப்பருப்பு கிடைக்கின்றது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.