மின்வாரிய தலைமை அலுவலகத்தில் “மின்னகம்” என்ற பெயரில் 24 மணி நேரம் நுகர்வோர் சேவை மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு 9498794987 என்ற மொபைல் எண்ணில் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுமே தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் புகார் மீது விரைவான விசாரணை எடுக்க வேண்டும் என்பதற்காக குறுஞ்செய்தி  வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, பொதுமக்கள் புகார் அளிக்கும்பொழுது, மின் இணைப்பு எண், பதிவு செய்த செல்போன் எண்ணை மின்னகத்தில் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த இணைப்புக்குரிய அலுவலக பொறியாளரின் எண்ணிற்கு SMS  அனுப்பப்படும். இதனால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.