
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் பொது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உடல் தகுதியை பராமரிக்க முக்கிய பயன்பாடாக உடற்பயிற்சி கூடங்கள் உள்ளதாகவும் அவற்றை எளிதாக தொடங்க உரிமம் பெறுவதில் தளர்வுகள் கொண்டுவரப்படும் என கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் கூறினார் .
தற்போது சென்னையில் உடற்பயிற்சி தொடக்க உரிமம் பெற தேவையில்லை என சட்டப்பேரவையில் நேற்று புதிய மசோதாவை அவர் தாக்கல் செய்தார். அதன்படி சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இனி உரிமம் தேவைப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.