கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என அம்மாநில ஐடி நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 10 மணி நேரம் ஐடி ஊழியர்களின் பணி நேரம் இருக்கும் நிலையில் தற்போது அதனை 14 மணிநேரமாக உயர்த்த வேண்டும் என ஐடி நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்கும் பட்சத்தில் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம். மேலும் ஐடி நிறுவனங்கள் 14 மணிநேரமாக வேலை நேரத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு ஐடி ஊழியர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.