டெல்லி உச்சநீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி சந்திர சூட் சட்டம் இனி குருடு அல்ல என்ற வாசகத்துடன் நீதி தேவதை சிலையை திறந்து வைத்தார். பொதுவாக நீதிமன்றங்களில் நீதி தேவதையின் கண்களில் கருப்பு துணி கட்டப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது நீதி தேவதையின் கண்கள் திறந்தவாறு கண்களில் கருப்பு துணி கட்டப்படாதவாறு புதிய சிலை நேற்று திறக்கப்பட்டது.

அதோடு இடது கையில் வாளுக்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகமும் வலது கையில் நீதி தராசும் இருக்கிறது. அதாவது சட்டத்தின் முன்பாக சமத்துவத்தை நிலைப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய சிலை திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக சட்டம் ஒரு இருட்டறை என்றெல்லாம் கூறப்படும் நிலையில் தற்போது இனி சட்டம் ஒரு குருடு அல்ல என்ற வாசகத்துடன் நீதி தேவதை சிலை திறக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.