மத்திய அரசு சமீபத்தில் காய்ச்சல் வலி போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் பாரா சிட்மல் உள்ளிட்ட 156 மருந்துகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. அதாவது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய மருந்துகள் விற்பனை செய்யப்படும் நிலையில் இவற்றின் செயல்திறன் மற்றும் விளைவுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது. அப்போது 156 மருந்துகள் மோசமான பக்க விளைவுகளை ஏற்படும் என்பது தெரிய வந்ததால் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மருந்து வழங்குதல் மற்றும் அதிகார கட்டுப்பாட்டாளர் எம்என் ஸ்ரீதரன் தற்போது ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது மத்திய அரசு தடை செய்துள்ள மருந்து மாத்திரைகளை தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது. அந்த 156 மருந்துகளையும் அக்டோபர் 22ஆம் தேதிக்கு பிறகு விற்கக்கூடாது. கையிருப்பு வைத்திருக்கும் மருந்து மாத்திரைகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி விட வேண்டும். அவர்கள் அந்த மருந்தை அழித்து விடுவார்கள். மேலும் இதை செய்யாமல் சம்பந்தப்பட்ட கடைகளில் மருந்துகளை விற்பனை செய்வது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.