தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பானி பூரி கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பானி பூரியில் ஊற்றப்படும் புதினா ரசத்தில் புற்றுநோய் உருவாக்கும் பச்சை நிறமி சேர்க்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பானிபூரி, தெருவோர உணவகங்களுக்கு மருத்துவ பதிவு சான்று கட்டாயம் என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும் சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.