
நில உரிமையாளர்கள் அனைவருமே கட்டாயமாக வைத்திருக்க வேண்டியது பட்டா. வருவாய்துறை சார்பாக இந்த ஆவணமானது வழங்கப்படுகிறது. இதில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். இந்த நிலையில் பட்டாவிற்காக பிரத்தியேகமான சாப்ட்வேர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பத்திரம், பட்டா என இரண்டும் சொத்துக்கள் விற்பதற்கும், வாங்குவதற்கும் சரிபார்க்கப்பட வேண்டிய அவசியம். ஆன்லைன் மூலம் பட்டா பெறுவதற்காகவும் சமீபத்தில் தமிழக அரசு தமிழ் நிலம் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற பிரயோகமான சாப்ட்வேரை உருவாக்கி உள்ளது.
இந்த நிலையில் நில ஆவணங்களுடன் ஆதார் இணைப்பதற்கு முக்கிய முயற்சி ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பட்டாவில் ஆதார் இணைப்பதற்காக ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. வீடு, மனை தொடர்பான கிரைய பத்திரங்களை பதிவு செய்யும்போது ஆதார் அடிப்படையிலான அடையாள ஆய்வு ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் ஆதார் இணைக்க புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் 9.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களுடன் ஆதார் இணைப்பதற்கான சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.