இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தினம் தோறும் பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் அவையில் தற்போது புதிய மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அல்லது வேலை வாங்கித் தருவதாக அல்லது பதவி உயர்வு வழங்குவதாக கூறி அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டால் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் நம்பிக்கை அளித்து அவருடன் உடலுறவு கொள்ளும் பட்சத்தில் குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் தொடர்ந்து இது போன்ற பெண்களுக்கு நம்பிக்கை அளித்து உடலுறவு கொண்டு ஏமாற்றும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கூட்டு பலாத்காரம் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிப்பதற்கும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.