
மதுரை மாவட்டம் மேலூர் அரிடாப்பட்டி பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த நிலையில் இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசும் கண்டிப்பாக சுரங்கம் வராது என்று உறுதி கொடுத்திருந்தது. இது தொடர்பாக நேற்று மதுரை மேலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமங்களின் தலைவர்கள் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அண்ணாமலை கூறி இருந்தார்.
அதன்படி இன்று அரிடாப்பட்டி சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அரிடாபட்டியில் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இனி மதுரை அரிடாபட்டி மக்கள் நிம்மதியாக தூங்குவார்கள். மேலும் சுரங்கம் தேவை என்றாலும் விவசாய பகுதி மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு அதனை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்று கூறினார்.