தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்வது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தற்போது மாவட்ட கல்வி நிர்வாகம் ஒரு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.

அதாவது தேர்வுக்கு முன்பு மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்வதாக புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் சென்றதால் தற்போது அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் பொது தேர்வுக்கு முன்பாக பாத பூஜை செய்வது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.