
சென்னை உயர்நீதிமன்றத்தில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பாக நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதாவது வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் கோர்ட் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதாவது யானைகள் உயிரிழப்பை தடுக்க உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு டெண்டர் இறுதிச் செய்யப்பட்டுள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இதைக் கேட்ட நீதிபதி இனி மின்வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்தால் மின்சார வாரியத்திற்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.