சென்னை மாவட்டம் வானகரம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதனால் போரூர் மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தபோது அந்த பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதனால் மளிகை கடை உரிமையாளர் சசிகுமாரை(42) போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது மளிகை கடைக்கு குட்கா பொருட்களை விநியோகம் செய்வது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் குமார்(36) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் மளிகை கடை உரிமையாளர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 30 கிலோ குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருட்களை வினியோகம் செய்வதற்கு உபயோகப்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சசிகுமார் மற்றும் ரமேஷ் குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.