
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பயணிகளுடைய வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், புத்தக ஆர்வலர்களின் வரவேற்பை பொறுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடுத்து டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தில் நூலகம் அமைக்கப்படும்.
இந்த நூலகங்களில் புத்தக விற்பனை, டிஜிட்டல் திரை போன்றவையும் அமைக்கப்படும். புத்தகம் வாசிக்கும் பயணிகள் வசதியான இருக்கைகளில் அமர்ந்து புத்தகங்களை படிக்கலாம். இந்த நூலகமானது ரயில் நிலையத்தில் மெட்ரோ டிக்கெட்டு வழங்கும் பகுதி அல்லது ஃபுட் கோர்ட் பக்கத்தில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.