
ரிலையன்ஸ் ஜியோ சினிமா பிரீமியம் குடும்பத்திட்டத்தில் 13 ரூபாய் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. தள்ளுபடிக்கு பின்னர் ஜியோ சினிமாவின் 89 ரூபாய் திட்டம் 76 ரூபாய்க்கு ஜியோ சினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் கிடைக்கும். 29 ரூபாய் ப்ரீமியம் மாதாந்திர திட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ சினிமா பிரிமியம் இல், HBO, Paramount மற்றும் பிற ப்ரீமியம் கண்டெட்டுகளையும் பார்க்க முடியும். ஜியோவிற்கு போட்டியாக பார்தி ஏர்டெல் 395 ரூபாய் திட்டத்தின் சேவை வேலிடிட்டியை 70 நாட்களாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.