
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையில் இணையதளம் மூலமாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சார துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் மின்சார பயன்பாடு 500 யூனிட்டுக்களுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யூபிஐ மூலமாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் அப் செயலி வசதி அறிமுகம் செய்துள்ளது.வாட்ஸ் அப் செய்தி TANGEDCO இலச்சினை மற்றும் குறியீடு, 9498794987 என்ற எண்ணை பயன்படுத்தி இனி வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்.