உலகம் முழுவதும் பல கோடி கணக்கான பயனர்களால் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் whatsapp-ல் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வருமான வரி தாக்கல் செய்யும் புதிய அப்டேட்டை மெட்டா அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம். அதன்படி ITR 1, ITR 4 படிவங்கள் மூலமாக வருமான வரி தாக்கல் செய்யலாம்.

இதற்கு பான் கார்டு, பேங்க் ஸ்டேட்மென்ட், ஆதார் அட்டை, டொனேஷன் செய்ததற்கான ரசீதுகள், ஹெல்த் மற்றும் லைப் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு பணம் செலுத்தியதற்கான ரசீதுகள், ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட வட்டி சான்றிதழ்கள், ஸ்டாக் டிரேடிங் ஸ்டேட்மெண்ட் போன்ற ஆவணங்களை வரி செலுத்துவதற்கு முன்பாக தயாராக வைத்திருக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து முதலில் whatsapp ல் clear tax என்ற எண்ணை சேவ் செய்து ஹாய் என்று டைப் செய்து விருப்பமான மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து ITR 1 , ITR 4 படிவங்களை நிரப்ப ஏஐ செயலியின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன் பிறகு ஆவணங்களை சரிபார்த்திருக்க வேண்டும். இதனை whatsapp வாயிலாக பாதுகாப்பான கட்டணத்துடன் முடிக்கலாம். இது அனைத்தையும் சமர்ப்பித்த பிறகு ஒப்புகை எண்ணுடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி கிடைக்கும். மேலும் whatsapp-ல் வருமான வரி தாக்கல் செய்வதற்கு 10 மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் எளிதாக இதனை பயன்படுத்தி வருமான வரி செலுத்தலாம்.