100 ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகள் மூலம் புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி கண்டதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் நிறுவனம், இரண்டாவது முறையாக புற்றுநோய் வருவதை இந்த 100 ரூபாய் மாத்திரை தடுக்கும் என கூறியுள்ளது. முன்னதாக புற்று நோய்க்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் சூழல் இருந்த நிலையில் டாடா நிறுவனத்தின் கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.