மாடர்ன் டெக்னாலஜி உலகில் உடல்நல பராமரிப்பை எளிதாகவும் ஸ்டைலாகவும் செய்யும் நவீன கண்டுபிடிப்பு தான் Fitness Rings. ஸ்மார்ட் வாட்ச்களை முந்தி, இவை தற்போது ஹாட் ட்ரெண்டாகஇருக்கின்றன. பாரப்படாத ஸ்லீக் டிசைனில் உருவாக்கப்பட்ட இந்த மோதிரம், உங்கள் உள்ளங்கையின் நெருக்கமான பகுதியான விரலில் சென்சார்கள் மூலம் உங்கள் உடல்நிலையை 24/7 கண்காணிக்கின்றன. இதன் மூலம் உங்கள் இருதயத் துடிப்பு, தூக்க நிலை, உடல் வெப்பநிலை, கலோரிகள் எரிப்பு, ஸ்டெப்புகள், ஸ்டிரெஸ் லெவல், ஹார்மோன் மாறுபாடு உள்ளிட்ட பலவிதமான தகவல்களை சேகரித்து, மொபைல் ஆப்பில் வெறும் கிராப் மற்றும் ஸ்கோர்களாக எளிதில் காட்டுகிறது.

சம்சங் கேலக்ஸி ரிங் (₹38,999), அல்ட்ராஹ்யூமன் ரிங் ஏர் (₹27,500), அமாஸ்ஃபிட் ஹெலியோ (₹19,999), காபிட் ஸ்மார்ட் ரிங் (₹13,110), மற்றும் போட் ஸ்மார்ட்ரிங் ஆக்டிவ் (₹2,999) என பல்வேறு பிராண்டுகள் இதில் பங்கேற்று போட்டியிடுகின்றன. ஒவ்வொன்றும் தத்தமது சிறப்புகளை கொண்டு வருகிறது. சில ரிங்களில் கேமரா கட்டுப்பாடு, மெட்டபாலிசம் கண்காணிப்பு போன்ற டாப்-டிரெண்டிங் வசதிகளும் உள்ளன. எல்லாவற்றிலும் நீண்ட நாள் பேட்டரி, வாட்டர்-ப்ரூஃப் வசதி, மற்றும் ஆப்பிள் ஹெல்த், கூகுள் ஃபிட் சப்போர்ட் போன்றவை பொதுவாக காணப்படுகின்றன. இவை ஸ்மார்ட் வாட்ச் போன்று அழுத்தம் தராமல், நகை போலவே அழகாக காட்சியளிக்கின்றன.

எனினும், குறைபாடுகளும் சில உள்ளன. ஸ்மார்ட் வாட்ச் போல நேரடியாக திரையில் காண முடியாததால், மொபைல் ஆப்பை திறக்க வேண்டியது அவசியம். சிலருக்கு சரியான அளவில் ரிங் கிடைக்காமல் போகலாம். கடுமையான உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் இது சேதமடையும் அபாயமும் இருக்கிறது. ஆனால் 24 மணி நேரமும் உங்கள் உடலை கண்காணிக்க சுமையின்றி உதவும் இந்த நவீன ரிங்கள், எளிமையான ரிப்போர்டுகளுடன் உங்கள் உடல்நலம் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த தீர்வாகவே இருக்கின்றன.