
பஞ்சாப் மாநிலத்தில் அரசு சேவைகளை வீடுகளுக்கு சென்று வழங்கும் புதிய திட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத்மான் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர். இதனால் பிறப்புச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் உட்பட 43 விதமான அரசின் சேவைகளை பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. வீடு தேடி 43 சேவைகள் மக்களை தேடி சென்றடையும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது பஞ்சாப்பிற்க்கு மட்டுமல்ல நாட்டுக்கே வரலாற்று சிறப்புமிக்க தினம் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்