
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் அதே சமயம் இரண்டு ரயில் நிலையங்களுக்கும் இடையே உள்ள 410 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்தில் கடக்கும் விதமாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பாட்னா மட்டும் ராஞ்சி வழித்தடத்தில் ஜன் சதாப்தி என்ற விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த ரயில் ஏழு மணி நேரம் 55 நிமிடங்களில் இந்த வழித்தடத்தை கடக்கும். தற்போது புதிதாக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் முக்கி ரயில் நிலையங்களில் இன்று செல்லும் எனவும் மற்ற வழித்தடங்களில் வாரத்தில் ஆறு நாட்களும் ரயிலின் முறையை பின்பற்றி இயக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரு மாநில தலைநகருக்கும் இடையே இயக்கப்படும் இந்த ரயில் ஆறு மணி நேரத்தில் பயண தூரத்தை அடையும் என கூறப்படுகிறது. இதன் மூலம் பயண நேரம் இரண்டு மணி நேரம் மிச்சப்படுத்தப்படும்.