
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். நடிகர் விஜய் சினிமாவில் இருக்கும்போதே பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். அதன்பிறகு நடிகர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்று மாணவர்களை அழைத்து உதவித்தொகை வழங்கினார். கடந்த மாதம் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் தன்னுடைய அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்தார். அதாவது குடும்ப அரசியல் செய்யும் கட்சி எனவும் திராவிட மாடல் என்று சொல்லி அவர்கள் மக்களை ஏமாற்றுவதாகவும் விஜய் நேரடியாகவே தாக்கி பேசினார்.
அதன்பிறகு பாஜகவை கூட மறைமுகமாக அவர் விமர்சித்தார். ஆனால் அதிமுகவை அவர் விமர்சிக்காததால் அந்த கட்சியினர் அதிமுக மக்களுக்காக பல நன்மைகளை செய்துள்ள கட்சி என்பதால் விஜயால் எப்படி விமர்சிக்க முடியும் என்றனர். அதோடு அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டு அதிமுகவுடன் வருகிற தேர்தலில் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதோடு தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது தான் தமிழக வெற்றிக்கழகத்தின் நோக்கம் என்றும் தெளிவாக தெரிவித்தனர்.
நடிகர் விஜயின் அரசியல் வருகை திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமையும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட கூறுகிறார்கள். குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக விஜயை பார்த்து பயப்படுவதாக கூறுகிறார்கள். அதன் பிறகு தற்போது அதிமுக மற்றும் திமுக என்ற நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடும் நிலையில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைவார் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதனால் தற்போது தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் அதிமுக, திமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு விஜய் டப் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் தான் வெற்றி பெறுவார் என்றும் தமிழகத்தில் முக்கியமாக உள்ள 4 கட்சிகளையும் பின்னுக்கு தள்ளுவார் என்றும் ஒரு வீடியோவை எடிட் செய்து அவருடைய ரசிகர்கள் இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
ஏழை மக்களின் தோழன் ஆட்சி விரைவில்- @Tvkvijayhq 💯🔥#விவசாயிகளின்தோழன்விஜய்pic.twitter.com/iGh3hQqTqE
— Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🧊🔥ᴸ ᴱ ᴼ (@vijay_mohammed) November 23, 2024