இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை கடும் விளைவு உயர்வை சந்தித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் போராட்டத்தில் பேடிஎம் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் இனி தக்காளியை கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யும் என்றும் இதற்காக இந்த நிறுவனம் என்சிசி எஃப், ஓ என் டி சி போன்ற நிறுவனங்களோடு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

டெல்லியில் என்சிஆர் பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 விற்பனை செய்யும் பணியானது  தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயனர்கள்  பேடிஎம் செயலின் மூலமாக  இலவச டெலிவரி வாரத்திற்கு இரண்டு கிலோ தக்காளியை வெறும் 140 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த திட்டம் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.