நாட்டில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிஎப் பணத்திற்காக பிடித்தம் செய்யப்படும். தொழிலாளர்களிடமிருந்து எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே அளவுக்கு தொகை நிறுவனத்திடம் இருந்தும் பெறப்படும். இதற்கு மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட வட்டி வழங்கும் நிலையில் ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது இந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் தற்போது புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் மிகப் பெரிய தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.

அதன்பிறகு இதில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பிஎப் பணத்தை விரைவில் எடுக்கும் பல வசதிகள் இருக்கிறது. அந்த வகையில் அடுத்த வருடம் முதல் இபிஎஃப்ஓ பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதனை தற்போது மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இவர் நேற்று தெலுங்கானாவில் நடைபெற்ற இபிஎஃப்ஓ புதிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் இபிஎஃப்ஓ 3.0 விரைவில் வர இருக்கிறது. மேலும் இதனால் நீங்கள் அந்த பணத்தை எடுக்க இனி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம் ஏடிஎம் சென்றாலே போதும் என்று கூறினார்.