இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன. குறிப்பாக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகளை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் பிரபல பண பரிவர்த்தனை செயலியான போன் பே தற்போது தனது பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

வால்மார்ட்டின் கட்டுப்பாட்டில் உள்ள முன்னணி ஆன்லைன் பேமெண்ட் நிறுவனமான போன் பே 6 வகை பாதுகாப்பான கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதன் பயனர்கள் மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், வாகனம், வீடு/சொத்து மற்றும் கல்வி கடன்களை விரைவாகப் பெறலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுடன் போன் பே ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளதாக தெரியவந்துள்ளது.