
தூத்துக்குடி பனிமய மாத கோயில் தங்கத்தேர் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஆக.5ம் தேதி இரவு 10.30-க்கு புறப்படுகிறது. அதேபோல், மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு ஆக. 6ம் தேதி இரவு 9.45க்கு இயக்கப்படுகிறது. சிறப்பு கட்டண ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது