
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தொழிற்சாலைகள் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த நிலையில் திடீரென ஒரு வாலிபர் ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் நாகப்பட்டினம் மாவட்டம் தர்மானபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த்சாமி என்பது தெரியவந்தது. அவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக புதுச்சேரியில் தங்கி மது குடித்த அரவிந்த்சாமி திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றர்.