
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது பொன்னியின் செல்வன் பட குழு படம் ரிலீஸ் ஆக இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வீடியோ மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The throne. The vengeance. The love. The war. Witness it all, in 100 days!
Mark your calendars – #PS2 releasing worldwide on April 28th ⚔#PonniyinSelvan #CholasAreBack #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN pic.twitter.com/7ywePAcpyn
— Lyca Productions (@LycaProductions) January 18, 2023