தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கடந்த மார்ச் 1 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.