
இஸ்லாமியரின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொகரம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜூன் 17 இன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11:00 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும். அதனைப் போலவே அதிகாலை ஐந்து மணி முதல் காலை எட்டு மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.