வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பெற்றோரும் பள்ளி மாணவர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி “சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதா வேண்டாமா என்பதை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்” என கூறியுள்ளார்.