தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கான துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் தொழிற்கல்வி துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tneaonline.org மற்றும் www.dte.tn.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 4 ஆகும்.

இந்த துணை கலந்தாய்வின் மூலம், பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். எனவே, பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.