
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது இ சேவை மையம் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்கள் நிலையை தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனைப் போலவே இன்று முதல் ரேஷன் கார்டில் திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.