தமிழகத்தில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று  (மே 6) வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும், இணையதளங்களிலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://www.dge.tn.gov.in மற்றும் http://www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.