தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது‌. ஆனால் தமிழகத்தில் இன்னும் 33 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் போன்றோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செல்போனில் எப்படி ஈசியாக அதை செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முதலில் உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் போனில் https://adhar.tnebltd.org/Aadhaar/என்ற இணையதள முகவரிக்குள் சென்று உங்களுடைய செல்போன் நம்பர், மின் இணைப்பு நம்பர் மற்றும் இமேஜில் இருக்கும் டெக்ஸ்ட் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் இணைக்க வேண்டிய மின் நுகர்வோரின் பெயர் திரையில் தெரியும். அதில் நீங்கள் வீட்டின் உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்பவரா அல்லது நீங்கள் வீட்டின் உரிமையாளர்களாக இருக்கும் பட்சத்தில் வேறு ஒருவர் பெயரில் மின் இணைப்பு இருக்கிறதா போன்ற ஆப்ஷன்கள் தோன்றும் நிலையில், உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து விட்டு நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஆதார் எண்ணில் கொடுத்துள்ள தொலைபேசி நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும். மேலும் இந்த நபரை டைப் செய்து சப்மிட் கொடுத்தால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.