ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு வியாபாரிக்கு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் ஒரு மகள் இருக்கிறார். இந்த மாணவிக்கு 21 வயது ஆகும் நிலையில் முகமது ஹர்ஷத் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாலிபருடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக instagram மூலமாக மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் முகமது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில் அடிக்கடி நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் மாணவி திடீரென கர்ப்பமானார்.

அவருக்கு 3 மாதங்கள் ஆன நிலையில் தன் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை பயந்து போய் மாணவி கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புதுக்கோட்டைக்கு சென்று வாலிபரின் பெற்றோரை சந்தித்து பேசினர். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறிய நிலையில் மாணவியின் பெற்றோர் நம்பிக்கையுடன் ஊருக்கு திரும்பினர். ஆனால் அவர்கள் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்ததால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் முகமது ஹர்ஷத், அவருடைய தந்தை உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இவர்களை விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர்கள் தலைமறை வாகிவிட்டதால் காவல்துறையினர் அவர்களை தேடி வருகிறார்கள்.