
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவர் மற்றும் சிறுமி என்பது தெரியவந்தது. இதனையடுத்து மற்ற இரு ஜோடிகளையும் எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர் சிறுவர் சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர்கள் instagram மூலம் பழகி வந்ததும் அதன்பிறகு காதலித்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரிக்கு வந்து கடலில் குளித்ததோடு விடுதியில் அறையெடுத்து தங்கிஉள்ளனர். இதில் அறையில் வைத்து மாணவன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவன் மற்றும் மாணவியின் பெற்றோர்களை வரவழைத்தனர். மேலும் மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில் விடுதியில் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் .