
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிம்ரன் சிங் (25). இவர் அரியான மாநிலத்தில் உள்ள குரு கிராம் பகுதியில் வசித்து வந்தார். இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். இவரை சுமார் 7 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இவர் ஃப்ரீலான்ஸ் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்தவர்.
இவர் கடைசியாக கடந்த 13ஆம் தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு அவர் எந்த ஒரு வீடியோவையும் வெளியிடாத நிலையில் இன்று தன்னுடைய அறையில் சடலசமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவருடைய தோழி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.