திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனின் அறிமுகம் பெற்று அவருடன் பேசி வந்துள்ளார். அதன் பிறகு இருவரும் காதலை பகிர்ந்து கொண்ட நிலையில் அந்த சிறுவன் சிறுமியிடம் ஐபோன் வாங்கித்தா என்று கேட்டுள்ளார். இதனால் அம்மாவின் ஏழு சவரன் நகைகளுடன் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நகைகளுடன் சிறுமியை காணாமல் போனதால் பதற்றம் அடைந்த பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர்.

தீவிர தேடுதல் மூலம் காவல்துறையினர் அந்த சிறுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பிடிபட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் அம்மாவின் நகைகளை விற்று ஆளுக்கு ஒரு ஐ போன் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுவனை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.